
2.
இந்தப் பூனை எங்கிருந்து வருகிறது? எவருக்குச் சொந்தமானது? என்று எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது! ஆனாலும் வாரத்தில் இரண்டொரு தடவைகள் அதைச் சந்திப்பதுமட்டும் எனக்கு வழக்கமாகிவிட்டிருக்கிறது.கடந்த சில மாதங்களாகவே எனக்கும் இந்தப் பூனைக்கும் இடையில் ஒரு பாசப்பிணைப்பு உருவாகியிருக்கிறது.
வெள்ளைநிறத்து மனிதர்களின் வீட்டில் வளர்ந்து அவர்களது மடியில் தவழும் இந்தக் காக்கை நிறத்துப் பூனைக்கு கர்வம் என்பது துளியும் இல்லைப் போலும்.
நடைபாதையில் எதிர்ப்படும் எவரைக்கண்டாலும் நின்று நிதானமாய் தனது மியாவ் மொழியில் „ஹலோ!“ சொல்லிவிட்டு அவர்களது மறுமொழியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அது.
எனக்கும் அதற்குமிடையிலான அந்த முதல் சந்திப்பும் அப்படித்தான் நிகழ்ந்ததது. ஒரு காலைப் பொழுதில் பணிமனைக்குப் போவதற்காக வீட்டு வாசற்கதவைத் தாழிட்டுவிட்டுத் தெருவில் இறங்கினேன். என் வீடமைந்திருக்கும் சிறியதெருவில் அப்போது ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. இரண்டடி வைத்திருப்பேன். எதிர்ப்பட்டது இந்தப் பூனை. எனக்குமுன்னால் சில அடி தூரத்திலிருந்து என்னை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.
„என்னடா இது? இந்தநேரம்பார்த்து இந்தப் பூனை வருகுது? பூனை குறுக்காலை வந்தால் போற காரியம் உருப்படுமா?“
-எனக்குள்ளிருந்து சலித்துக்கொள்ளும் மூடநம்பிக்கையாளன் என்னைக் கேட்டான்.
"இப்பிடிச் சாத்திரங்கள் பார்க்க வெளிக்கிட்டால் இங்கை ஒரு காரியமும் பார்க்கமுடியாது!" என்று என்னைக் கடிந்துகொ
ண்டே நடந்தேன்.
பூனையின் மீதே என் பார்வை பதிந்திருந்தது.கட்டிளங்காளை ஒருத்தன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டே உல்லாசமாக நடந்து வருவதைப்போல் அந்தப் பூனை நடந்து வந்துகொண்டிருந்தது.ராஜநடை என்பார்களே அப்படி ஒரு நடை.அதன் பார்வையும் என்மீதே இருந்தது.மிக அண்மித்ததும் அது தயங்கிற்று. மெள்ளக் கால்களைமடித்து உட்கார்ந்து கொண்டது.
ண்டே நடந்தேன்.பூனையின் மீதே என் பார்வை பதிந்திருந்தது.கட்டிளங்காளை ஒருத்தன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டே உல்லாசமாக நடந்து வருவதைப்போல் அந்தப் பூனை நடந்து வந்துகொண்டிருந்தது.ராஜநடை என்பார்களே அப்படி ஒரு நடை.அதன் பார்வையும் என்மீதே இருந்தது.மிக அண்மித்ததும் அது தயங்கிற்று. மெள்ளக் கால்களைமடித்து உட்கார்ந்து கொண்டது.
அதைக் கடந்துபோகமுடியாமல் எனது கால்களும் தயங்கின.
என்னைப் பார்த்து மியாவ் என்றது.
பாதையில் எவர் எதிர்ப்பட்டாலும் காலை வணக்கம் சொல்கிற ஜெர்மனியர்களின் பண்பாட்டை இதுவும் கற்றிருந்ததுபோலும்.பதில் வணக்கம் சொல்லியாகவேண்டுமே! எப்படிச் சொல்வது?
எல்லா மொழிக்கும் பொதுவார்த்தையாக இருக்கிற ஹலோவைச் சொல்லிவைத்தேன்.குனிந்து மென்மையாக அதன் முதுகை வருடினேன்.சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்தது.மின்னும் விழிகளால் ஒரு பிரியப்பார்வை பார்த்துவிட்டுத் தன்வழியே நடக்க ஆரம்பித்தது.
நான் என் பாதையில் நடந்தாலும் இந்தப் பூனையின் நினைவும் கூடவே நிழலாய் என்னைத் தொடர்ந்தது.
நான் போன காரியம் எந்தக் குறையுமில்லாமல் முடிந்ததால் அந்தப் பூனைமீது கோபப்படவேண்டிய தேவையும் இல்லாது போயிற்று.பின்னரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.நின்று நிதானித்து என்னிடம் சுகம் விசாரித்துப் போகும் அதன் வழக்கம் மாறவில்லை.
நான் போன காரியம் எந்தக் குறையுமில்லாமல் முடிந்ததால் அந்தப் பூனைமீது கோபப்படவேண்டிய தேவையும் இல்லாது போயிற்று.பின்னரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.நின்று நிதானித்து என்னிடம் சுகம் விசாரித்துப் போகும் அதன் வழக்கம் மாறவில்லை.
சிலவாரங்களுக்குமுன்பு ஒரு மாலைப் பொழுதில் வீட்டின் நிலவறையில் ஏதோ அலுவலாக இருந்தேன். வெளிவாசற் கதவும் காற்றோட்டத்திற்காகத் திறந்து வைத்திருந்தேன்.கதவோரத்தில் யாரோ நடமாடுவது போலிருந்தது.எழுந்து வந்து பார்த்தால் இந்தப் பூனை! எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் வழக்கம்போல் கம்பீரமாய் நடந்து அறையெங்கும் சுற்றிப்பார்த்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு மெள்ள நடந்து வாசலருகே போய் உட்கார்ந்துகொண்டது.
அந்நியர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறோமே என்று எவ்வித அச்ச உணர்வோ தயக்கமோ அதற்கு இருந்ததாகத் தெரியவில்லை.
அந்நியர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறோமே என்று எவ்வித அச்ச உணர்வோ தயக்கமோ அதற்கு இருந்ததாகத் தெரியவில்லை.„ஒருவேளை இந்தப் பூனைதான் முற்பிறப்பில் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்குமோ? இந்தப் பிறப்பிலும் பற்றுவிடாமல் வந்து பார்த்துச் செல்கிறானோ?“
-என்னுள்ளிருந்த கற்பனையாளன் எனக்குச் சொல்லிக்கொண்டான். இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று என்னைச் சமாதானம் பண்ணிக்கொண்டேன்.
வசதியான நாடுகளில் விலங்குகள்கூட அன்புகாட்டப் பழக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வறுமைப்பட்ட நாடுகளிலோ மனிதர்களுக்கு மனிதர்களே அன்புகாட்ட மறுக்கிறார்கள்.தனது சுயவாழ்வின் தேவைகள் பூர்த்தியாகாத நிலையில் பிறர்மீது இரங்குவதும் பிறர்மீது அன்புகாட்டுவதும் மனிதனால் இயலாத காரியமாகப் போய்விட்டது.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மம் என்றானபோது அவர்களிடத்திருந்து அன்பை எதிர்பார்ப்பதும் இயலாதுதான்.
„வசதியான நாடுகளில் மக்கட்தொகைப்பெருக்கம் குறைவாயிருக்க வசதிகுறைந்த நாடுகளில்மக்கட்தொகைப் பெருக்கம் அளவுக்கதிகமாக இருக்கிறதே ஏன்?“
„வசதியானவனுக்கு எத்தனையோ பொழுதுபோக்குகள். ஆனால் வசதி குறைந்தவனுக்கோ அவனது மனைவிதான் பொழுதுபோக்கு அதனால்தான் வறுமைப்பட்டவன் வீட்டில் அதிக குழந்தைகள் பிறக்கின்றன!“ என்று ஒரு அனுபவசாலி சொன்னார்.
„வசதியானவனுக்கு எத்தனையோ பொழுதுபோக்குகள். ஆனால் வசதி குறைந்தவனுக்கோ அவனது மனைவிதான் பொழுதுபோக்கு அதனால்தான் வறுமைப்பட்டவன் வீட்டில் அதிக குழந்தைகள் பிறக்கின்றன!“ என்று ஒரு அனுபவசாலி சொன்னார்.
ஆனால் இந்தக் கேள்விக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சொன்ன பதில் வேறானது:„ஓருவன் பிறப்பிலேயே வசதியானவனாகவே வந்து பிறப்பதற்கு அவன் முற்பிறப்பில் ஏராளமான புண்ணியங்களைச் செய்திருக்கவேண்டும். அந்த அளவுக்கு அதிக புண்ணியத்தைத் தேடிக் கொள்பவர்கள் மிக அரிது. அதனால்தான் வசதியான குடும்பங்களில் அதிக பிள்ளைகள் பிறப்பதில்லை. பாவப்பட்ட ஜென்மங்கள் வறுமைப்பட்டவன் வீட்டில் வந்து பிறக்கிறார்கள்.துன்பங்களை அனுபவிக்கிறார்கள்!“
மறுமை உண்டா இல்லையா என்பதில் நமக்குள் விவாதங்கள் இருக்கலாம்.ஆனால் சுவாமிகள் சொன்னதில் ஓர் உண்மை புலனாகிறது.புண்ணிய ஆத்மாக்களே சொர்க்கத்தைக் காண்கிறார்கள் என்பதே அது.
இந்தச் சொர்க்கம் என்பது வானத்தில் இருந்து வருவதல்ல. அது மண்ணில்கூட இருக்கலாம்.
உயிர்களிடத்தில் அன்புவேண்டும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்
வைரமுடையநெஞ்சு வேண்டும் - இது
வாழும் முறைமையடி பாப்பா
என்று பாரதி சொன்னதும் கருத்தில் கொள்ளப்படவேண்டியது.
(இன்னும்)
(இன்னும்)
0 Kommentare:
Kommentar veröffentlichen