1.
ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடக்கிறது அந்தப் பழையகாலத்து கல்வீடு!ஆட்கள் மட்டுமல்ல
பாவனைப் பொருட்கள் ஏதுமற்று வெறுமையாகவும் காட்சி தருகிறது அது. வீட்டின் வெளிச்சுவர்களிலும் முற்றத்திலும் கோடியிலும் பக்கத்துக் காணிகளிலும் என்று பற்றைக் காடுகளாய்ப் பரவிக்கிடக்கும் செடிகொடிகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறது அந்தவீடு. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். பாதுகாக்கவோ பராமரிக்கவோ குடியிருக்கவோ என்று எவரும் அண்டாமல் அதைப் புறம்தள்ளியிருந்தார்கள்.
பாவனைப் பொருட்கள் ஏதுமற்று வெறுமையாகவும் காட்சி தருகிறது அது. வீட்டின் வெளிச்சுவர்களிலும் முற்றத்திலும் கோடியிலும் பக்கத்துக் காணிகளிலும் என்று பற்றைக் காடுகளாய்ப் பரவிக்கிடக்கும் செடிகொடிகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறது அந்தவீடு. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். பாதுகாக்கவோ பராமரிக்கவோ குடியிருக்கவோ என்று எவரும் அண்டாமல் அதைப் புறம்தள்ளியிருந்தார்கள்.சற்றுத் தொலைவில் குடிசைகட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரிடம் யாரோ கேட்டார்கள்:
„அந்த வீடு சும்மாதானே கிடக்குது.. நீங்கள் அங்கைபோய் இருக்கலாமே?!“
„அந்த வீடு சும்மாதானே கிடக்குது.. நீங்கள் அங்கைபோய் இருக்கலாமே?!“
„அங்கேயா?“ என்று அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். கண்களில் கலக்கம். கலக்கத்தோடு கூடிய மிரட்சி.
“அந்தப் பேய்வீட்டிலை போய்க் குடியிருக்கிற துணிச்சல் இங்கை ஆருக்குமே இல்லை!”
“பேய்வீடா..?” கேட்கும்போதே சிரிப்பு வந்தது.
இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் மனிதர்கள்கூடவா பேய்பிசாசு என்று கதைத்துக் கொணடிருக்கிறார்கள்.
„வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க உன்
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே!“
- எத்தனை பட்டுக்கோட்டைகள் பாட்டுக் கோட்டை கட்டினாலும் இந்தப் பித்தர்களை மாற்றிவிட முடியாதோ என்றே எண்ணத் தோன்றிற்று.
„ஆர் சொன்னது இது பேய்வீடு எண்டு..? ஆராவது பேயைக் கண்டிருக்கிறீங்களா?“
„பேய் எல்லாரின்ரை கண்ணிலையும் படாது தம்பி... அது சில கணங்களிலை பிறந்த ஆக்களுக்கு மட்டும்தான் தெரியும்! கண்டவங்கள் சொன்னால் நம்பத்தானே வேணும்!“
„அதெல்லாம் சும்மா பேய்க்கதை!“
„உமக்கென்ன நீர் சொல்லிப்போட்டுப் போயிடுவீர்... இருக்கிற எங்களுக்குத்தானை அதைப்பற்றித் தெரியும்!
„என்ன தெரியும்?“
„இங்கை என்ன நடக்குதெண்டு ஒரு ரெண்டு நாளைக்கு இங்கை இருந்து பாரும்! இரவுநேரங்களிலை நடுச்சாமத்துக்குப் பிறகு அந்த வீட்டுக்குள்ளை யிருந்து வாற அழுகுரல்களைக் கேட்டீரெண்டால் உமக்கு உண்மை விளங்கும்.!“
„நீங்கள் என்னதான் சொல்லுங்கோ.. எனக்கு இதுகளிலை நம்பிக்கை இல்லை!“
„ஏதோ இந்த உலகத்திலை நிரந்தரமாய் இருக்கப் போற ஆள்மாதிரி வீறாப்பாய்க் கதைக்கிறீர்.. உம்மைப் போல எத்தினைபேர் பெரிசா ஞாயம் கதைச்சுப் போட்டு பிறகு வாயைப் பிளந்துகொண்டு போய்ச் சேர்ந்திட்டினம்.. பிறந்தால் எல்லாரும் ஒருநாள் சாகிறதுதான்.. செத்ததோடை எல்லாம் முடிஞ்சு போச்சுது எண்டு நினைக்கிற மேதாவியள்தான் இந்த உலகத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கினம்.. பாவபுண்ணியத்திலை பயம் இல்லை கடவுள் நம்பிக்கை இல்லை. தாங்கள் வாழுறதுக்காக எத்தனைபேரையும் கொல்லலாம் எண்டு நினைக்கிற சதிகாரங்கள்... இவங்களாலைதான் உலகம் பாழாப் போச்சுது! கடைசியிலை இவங்கள்தான் பேய்பிசாசுகளாய் அலைஞ்சு திரியிறாங்கள்.. உமக்கும் இந்தக் கெதி வரவேணுமே?“
-சில மனிதர்களின் இத்தகைய கோபம் நியாயத்தைப் புரியவைக்க முயல்கிறதா அல்லது கோழைத்தனத்தை வளர்த்துவிட முயல்கிறதா?எதுவாயினும் மரணம் என்பது மாற்ற முடியாத விதி!
மரணத்துக்குப் பின்..?
-கேள்வியில் திணறுகிறது மனம்.
„...வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது



0 Kommentare:
Kommentar veröffentlichen